ஆரணியில் அதிமுகவின் 52ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கிகொண்டாடினார்கள்.

ஆரணியில் அதிமுகவின் 52ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கிகொண்டாடினார்கள்.

ஆரணியில் அதிமுகவின் 52ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்
சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கி
கொண்டாடினார்கள்.

இதில் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை
அருகே அதிமுகவின் 52ம் ஆண்டு கட்சி துவக்க விழாவை முன்னிட்டு நகர மன்ற
துணை தலைவர் பாரிபாபு நிகழ்ச்சி ஏற்பாட்டில்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட
செயலாளர் ஜெயசுதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று எம்.ஜி.ஆர் சிலைக்கு
மாலை அணிவித்து ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னாதானம் வழங்கி
கொண்டாடினார்கள்.

அதே போல ஆரணி அருகே சேவூர் பைபாஸ் சாலையில் ஓன்றிய செயலாளர் கஜேந்திரன்
நிகழ்ச்சி ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்க இனிப்புகள் மற்றும் அன்னதானம்
வழங்கி கொண்டாடினார்கள்.

இதில் அதிமுக கட்சி
நிர்வாகிகள் கட்சியினர்
திரளாக பங்கேற்றனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..