திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள ஆரணி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளன.
இந்த ஓன்றியத்தில் திமுக சார்பில் 13 ஓன்றிய கவுன்சிலர்களும் அதிமுக சார்பில் 5 ஓன்றிய கவுன்சிலர்களும் உள்ளனர். ஓன்றிய பெருந்தலைவராக திமுகவை சேர்ந்த கனிமொழிசுந்தர் என்பவர் உள்ளார்.
மேலும் இன்று ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் ஓன்றிய பெருந்தலைவர் கனிமொழிசுந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக அதிமுக ஓன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் முன்னதாக கூட்டத்தை தொடங்கிய உடன் எஸ்.வி.நகரம் ஓன்றிய கவுன்சிலர் கவிதா இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.

பின்னர் அதிமுக கவுன்சிலர்களின் கோரிக்கைகளை முழுவதுமாக நிராகரிக்கபடுவதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றசாட்டினார்கள். திடிரென ஓன்றிய பெருந்தலைவர் கனிமொழிசுந்தர் அவர்களை கண்டித்து அதிமுக சார்பில் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர்.