திருவண்ணாமலை மாவட்டம் செங்கம். போளூர் மற்றும் குப்பநத்தம் மும்முனை சந்திப்பு சாலையில் ஜவ்வாது மலை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கிளையூர் சரசு எம்.சி.அசோக் ஆகிய உரிமையாளர்களின் சார்பில் ஜவ்வாது புட்ஸ் ஆரியவகை பாரம்பரிய சிறுதானிய பிஸ்கட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகிய உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் இந்த அரியவகை பாரம்பரிய சிறுதானிய உணவகம் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று ரிப்பன் வட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி கற்பூர தீபாரதனை செய்து முதல் விற்பனையை துவக்கி வைத்து விற்பனைக்காக காட்சிப்படுத்திய அரியவகை சிறுதானிய பாரம்பரிய உணவு பொருட்களை பார்வையிட்டு தேனீர் அருந்தி சிறப்பித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஜவ்வாது புட்ஸ் அரியவகை சிறுதானிய பாரம்பரிய உணவக உரிமையாளர்கள் சரசு எம்.சி.அசோக் ஆகியோர்கள் சார்பில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் ஆன்மீக புகைப்படத்தை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்து பெற்றனர்.
விழாவில் செங்கம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி சி.மனோகரன், புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் ரமேஷ், பழனிராஜ் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, மகளிர் அணி மற்றும் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.