வயசாகி பல்லு விழுந்த பிறகும் நடிக்கிறாங்க ரஜினியை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்…!!!

வயசாகி பல்லு விழுந்த பிறகும் நடிக்கிறாங்க ரஜினியை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்…!!!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்கள் இன்னும் நடித்து வருவதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகர் ரஜினிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்திருக்கிறார். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் போன்றோரை சமாளிப்பது பெரிய விஷயம் என்றும் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் என்று ரஜினிகாந்த் பேசினார்..

ரஜினியை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்:

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்கள் இன்னும் நடித்து வருவதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகர் ரஜினிக்கு துரைமுருகன் பதில் அளித்திருக்கிறார். பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் துரைமுருகன், உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விசிக தலைவர் தொல். திருமாவளவன், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

நிகழ்சசியில் பேசிய ரஜினிகாந்த், ஒரு பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்ந்தால் பிரச்னையே இல்லை. அந்த பள்ளியில் ஏற்கனவே இருக்கக் கூடிய பழைய மாணவர்களைச் சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. இங்கே (திமுக) ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பெயில் ஆகிப் போனவர்கள் அல்ல. ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள். அசாத்தியமான அவர்களை சமாளிப்பது எளிதல்ல. அதுவும் துரைமுருகன் போன்றோரை சமாளிப்பது பெரிய விஷயம். துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர்..

பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்.

அவரிடம் எதாவது ஒரு விஷயத்தை சொன்னால் அதற்கு அப்படியா! ரொம்ப சந்தோஷம் என்று துரைமுருகன் பதில் அளிப்பார். அவர் நன்றாக இருக்கிறது சந்தோஷம் என்று சொல்கிறாரா அல்லது நன்றாக இல்லை என்பதற்காக சந்தோஷம் என்று சொல்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது. இந்த சூழலில் சிறப்பாக செயலாற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆப் என்றார். ரஜினியின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் இருநத அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்..

இந்நிலையில் விஜயவாடாவில் நடைபெறும் வேட்டையன் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.. அப்போது செய்தியாளிடம் பேசிய ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்டகால நண்பர் அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது எங்களுடைய நட்பு எப்போதும் தொடரும் என்றார்..

நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் அமைச்சர்…

இதற்கிடையே வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துணைமுருகன் விழாவின் நடுவிலே மேடையில் இருந்து இறங்கி வந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.. அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன் எங்கள் நகைச்சுவையை பகைச்சுவையாக யாரும் பயன்படுத்த வேண்டாம் நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்று தெரிவித்தார்..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..