திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு செஞ்சி சாலையில்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் குமார் வயது ( 46 ) இவர் தற்போது ஆவணியாபுரம் அடுத்த நரியம்பேட்டையில் தனது பெற்றோருடன் வசித்து வருகின்றார்.
மேலும் குமார் மீது பல்வேறு திருட்டு வழக்கு ஏற்கனவே உள்ளன. மேலும் ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்த வரதன் மகன் கமலக்கண்ணன் வயது (33 ) குமாரும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் பல இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகின்றன.
மேலும் திருட்டு சம்பவத்தில் இருவருக்கு முன் விரோதம் இருந்ததுள்ளதாக கூறப்பபடுகின்றன. இதனையொடுத்து சேத்பட் விழுப்புரம் சாலையில் குமார் தனது உறவினர் விநாயகம் என்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்
மேலும் அப்போது குமாரிடம் கமலக்கண்ணன் தகராறில் ஈடுபட்டு அருகில் இருந்த மண் வெட்டியை எடுத்து குமாரை தலையில் தாக்கினார்.. இதில் பலத்த காயமடைந்த குமாரை சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையை அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார்…
” இறந்த குமாருக்கு கலா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.. இச்சம்பவம் குறித்து உறவினர் விநாயகம் சேத்துப்பட்டு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்…