திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு அருகே மங்களாபுரம் கொல்லமேடு கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் பசுபதி (22) இவர் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணை கற்பழிக்க முயன்று கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.
மேலும் இது சம்மந்தமாக கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மைனர் பெண் கொடுத்த புகாரின் பேரில் சந்தவாசல் போலீசார் பசுபதியை கைது செய்து கொலை முயற்சி மற்றும் கற்பழிப்பு கொலைவெறி தாக்குதல் போஸ்கோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையொடுத்து இந்த வழக்கு திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று பசுபதி என்ற வாலிபருக்கு 16 ஆண்டு சிறை தண்டனையும் 3ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
ஆரணி அருகே பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபருக்கு சிறப்பு நீதிமன்றம் 16 ஆண்டு சிறை தண்டணை வழங்கியது கிராம பொதுமக்களின் இடையே வரவேற்பு பெற்றுள்ளன.