ஆரணி டவுன் பகுதியில் தொடர் குற்ற சம்பவம் டிரைவரிடம் பட்டபகலில் பிக்பாக்கெட் அடித்த கொள்ளையர்கள் போலீஸ் திணறல்.

ஆரணி டவுன் பகுதியில் தொடர் குற்ற சம்பவம் டிரைவரிடம் பட்டபகலில் பிக்பாக்கெட் அடித்த கொள்ளையர்கள் போலீஸ் திணறல்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் எல்லைக்குபட்ட போலீஸ் ஸ்டேஷன்இன்ஸ்பெக்டர் சுப்பரமணியன் எஸ்.ஐக்கள் சுந்தரேசன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இது மட்டுமின்றி தனிப்பிரிவு அதிகாரிகளாக ஜோதி வினோத் என்பவரும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆரணி அருகே 12புத்தூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் என்பவருக்கு இந்திரா என்ற மனைவியும் விஜய் என்ற மகனும் உள்ளனர். விஜய் சென்னை சினிமா சூட்டிங் எலக்ட்ரீசினியாக பணியாற்றி வருவதாகவும் எலக்ட்ரீசியன் சினிமா சங்கத்தில் சேருவதற்காக டிரைவர் வெங்கடேசன் தெரிந்த நபர்களிடம் 1லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்று தன்னுடைய மகனிடம் வழங்க ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சென்னை பேருந்தில் ஏற முயன்ற போது கூட்ட நெரிசலில் பயன்படுத்தி மர்மநபர்கள் டிரைவர் வெங்கடேசன் என்பவரிடம் பாக்கெட்டில் மஞ்சள் பை சுருட்டி வைத்திருந்த பணத்தை பிளேடால் அறுத்து கொள்ளையடித்து சென்று விட்டனர்.

மேலும் இதனை அறிந்த டிரைவர் வெங்கடேசன் கதறி அழுது பின்னர் இது சம்மந்தமாக ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் அலட்சியமாக உள்ளனர்.

பின்னர் பாதிக்கபட்ட நபர் தொடர்ந்து போலீசாரை அணுகி தொந்தரவு செய்த பின்பு போலீசார் வழக்கு பதிவு செய்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரணி டவுன் பகுதியில் ஏற்கனவே கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கொண்டிருந்த போது பைக்கில் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவமும் பட்டபகலில் ஆரணி டவுன் ஆறுமுகம் தெரு குடியிருப்பு பகுதியில் மூதாட்டி கழுத்தில் கத்தி மிரட்டிய சம்பவம் ராமகிரு~;ணாபேட்டை பகுதியில் கட்டுமான பணி நடைபெற்ற வீட்டில் உள்ளே புகுந்து திருட முயன்ற வாலிபரை கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் போலீசார் சம்பவடத்திற்கு செல்லாமல் திருட முயன்ற வாலிபரை வீட்டு உரிமையாளரிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதே போல பெரியகடை வீதியில் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் திருடிய நபரை வீட்டின் உரிமையாளர் பிடித்து போலீசில் ஓப்படைத்த போது காலதாமதாக வழக்கு பதிவ செய்யபட்டுள்ளன. இதனால் தற்போது ஆரணி டவுன் பகுதியில் குற்றசம்பவம் அதிகரித்து வருவதும் இதற்கு போலீசார் துணை போக்கின்றனரா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுக்கின்றன.

மாவட்ட கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்காமல் ஆரணி டவுன் ஸ்டேஷன் பல குற்றசம்பவங்களை மறைத்து விடுவதாக போலீசாரின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனியாவது மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன் விழித்து கொண்டு செயல்பட்டு ஆரணி நகர மக்களை பாதுகாப்பாரா என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எதிர்பார்ப்பு?

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..