திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்ள்ளியில் செய்யார் மாவட்ட சுகாதார துறை சார்பில் வரும் முன் காப்போம் கலைஞரின் மருத்துவ முகாம் வட்டார மருத்துவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஓன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம் மாநில தொழிலாளர் திறன் வாரிய உறுப்பினர் அன்பழகன் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த மருத்துவ முகாமினை ஓன்றிய குழு தலைவர் பச்சையம்மான் சீனிவாசன் குத்து விளக்கு ஏற்றி வைத்து கலைஞரின் திருவுறுவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனையொடுத்து இந்த மருத்துவ முகாமில் பொதுமருத்துவம் குழந்தை நல தடுப்பூசி காது மூக்கு தொண்டை கண்பரிசோதனை தோல் மற்றும் பல் மருத்துவமனை உள்ளிட்ட நோய்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கபட்டன. பின்னர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்கள்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயாணிரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் துரை.மாமது, மோகன்,ஒன்றிக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ்,ரஞ்சித், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் பொதுமக்கள் திரளாக பங்கேற்று மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று கொண்டனர்.