திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரி அரசு பள்ளி தமிழ் ஆசிரியை குடை வளையல் உள்ளிட்ட பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை.

திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரி அரசு பள்ளி தமிழ் ஆசிரியை குடை வளையல் உள்ளிட்ட பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் உமாராணி தம்பதியிருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் உமாராணி கடந்த 24 ஆண்டுகளாக அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியையாகவும் தற்போது ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார்.

மேலும் தமிழ் ஆசிரியை உமாராணிக்கு தமிழ் மீது அதிகளவில் பற்று கொண்டதால் கொரோனா காலத்தில் வீட்டில் ஓய்வு நேரத்தில் இருந்த போது கவிதை மற்றும் நூல்கள் எழுதியுள்ளனர். இதனை தொடர்ந்து திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரி புதிய முயற்சியாக சோயாபீன்ஸ் அகல்விளக்கு, கை வளையல், கழுத்தில் அணியும் மணி, ரூபாய் நாணயம், மற்றும் குடைகளில் தேசிய கொடி, சிரஞ்சிவ், உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.

இதனை ஆல் இண்டியா புக்ஸ் ஆப் ரெக்கார்டு மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது நல்லாசிரியர் உள்ளிட்ட இதுவரையில் 70க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ் ஆசிரியை உமாராணி பெற்றுள்ளார்.

மேலும் தமிழ் பற்றால் பல சாதனைகளை புரிந்த தமிழ் ஆசிரியை உமாராணியை கண்டு பாண்டிச்சேரி ஆளுநர் தமிழசை சௌந்தராஜன் நேரில் அழைத்து கௌரவித்து பாராட்டினார். இதே போல அரசு பள்ளி மாணவ மாணவிகளை தமிழ் ஆசிரியை உமாராணி புதிய முயற்சி மேற்கொண்டு சாதனை புரிய முயற்சி செய்து வருகின்றார்.

ஆரணியில் பெண் தமிழ் ஆசிரியை திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரி சாதனை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளை உற்சாகபடுத்தி வருகின்றன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..