கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் விபத்தில் சிக்கிய அரசுப்பேருந்து அந்தரத்தில் தொங்கியதை அடுத்து, கண்ணாடியை உடைத்து, உள்ளிருந்த 40 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னையிலிருந்து இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கொண்டிருந்த அரசு பேருந்தை திருவாரூர் மாவட்டம் சந்திரசேகரபுரம் கிராமத்தை சேர்ந்த வீரமணி (54) என்பவர் பேருந்தை இயக்கி வந்தார். இதில் சுமார் 40 பயணிகள் அதில் பயணம் செய்து வந்தனர்.
இந்நிலையில் பேருந்து நள்ளிரவு 12.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துகுள்ளானது.
மேலும் அரசு பேருந்து, தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சென்று, முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.
பேருந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததால் பயணிகள் உடனடியாக வெளியே வர முடியவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களின் உதவியுடன் பேருந்தின் கண்ணாடியை உடைத்து அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.
மேலும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம்
அனுப்பி வைத்தனர். மேலும் மீட்பு வாகனம் கொண்டு, அந்தரத்தில் தொங்கிய பேருந்தை மீட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…