ஆரணி பிரபல ஸ்வீட்ஸ் கடையில் குடோனில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

ஆரணி பிரபல ஸ்வீட்ஸ் கடையில் குடோனில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

4மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஆரணி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

ஆரணி பிரபல ஸ்வீட்ஸ் கடையில் குடோனில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து 4மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஆரணி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மார்க்கெட் வீதியில் ஆரணியை சேர்ந்த அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரிபாபு என்பவர் பாரி ஸ்வீட்ஸ் என்ற கடையை நடத்தி வருகின்றார்.

மேலும் ஸ்வீட்ஸ் கடைக்கு பின்புறத்தில் உள்ள குடோனில் சிலிண்டர் மற்றும் கடைக்கு தேவையான மூலபொருட்கள் வைக்கபட்டுள்ளதாக கூறப்படுகின்றன.

இந்நிலையில் குடோனில் தீபொறி உரசி தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் வைக்கபட்ட சுமார் 10சிலிண்டர்களில் 4சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் குடோன் அருகில் புதிய பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் தகவலறிந்த வந்த தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
இதனையொடுத்து இச்சம்பவம் ஆரணி பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் அந்தபகுதியில் குவிந்தனர்.

பின்னர் டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சேதாரம் தவிர்க்க தீயணைப்பு துறையினருக்கு உதவினர்.
மேலும் தொடர் தீ மூட்டத்தால் அந்த பகுதி முழுவதும் கருப்புகை ஏற்பட்டது. தீ பரவாமல் இருக்க அருகில் உள்ள எண்ணை குடோனில் உள்ள பேரல்களை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அப்புறபடுத்தினார்கள்.

ஆரணியில் பிரபல ஸ்வீட்ஸ் கடை குடோனில் எரிவாயு கசிவு காரணமாக 4 சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்துகுள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..