ஆரணி அருகே இரயில் தண்டவாளத்தை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற விவசாயி ரயில் மோதி பலி

ஆரணி அருகே இரயில் தண்டவாளத்தை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற விவசாயி ரயில் மோதி பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வி.வி தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன்(45) யசோதா தம்பதியினருக்கு 2மகள் 1மகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

மேலும் நேற்று இரவு ஓண்ணுபுரம் அருகே பெரிய அய்யம்பாளையம் கோவிலுக்கு சாமி கும்பிட்டு மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

மேலும் ஏற்கனவே வி.வி.தாங்கல் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கபாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் சுரங்கபாதையை பயன்படுத்த முடியாமல் கிராம பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை தற்போது கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளன.


இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் விவசாயி மகேந்திரன் நேற்று இரவு வி.வி.தாங்கல் கிராமத்தில் உள்ள இரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விழுப்புரத்திலிருந்து காட்பாடி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் இரயில் மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவடத்திலேயே தூக்கி வீசபட்டு விவசாயி பரிதாபமாக உயிரழந்தார்.

இதனையடுத்து தகவலிந்து வந்த காட்பாடி இரயில்வே போலீசார்; விவசாயின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் சுரங்கபாதையில் இருந்த மழைநீரை வெளியேற்றாமல் மெத்தன போக்கில் இருந்துள்ளதால் ஆபத்தான முறையில் இரயில் தண்டவாளத்தை கடக்கும் போது விவசாயி பரிதாபமாக உயிரழந்துள்ளதாக கிராம பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..