வேலூர் டவுன் விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அளிக்கபட்ட புகாரில் விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (வ/43) து/பெ கிருஷ்ணன் என்பவர் தான் பெற்ற மகளையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக சிறுமி அளித்த வாக்குமூலம் அளித்தார்.
இதனையொடுத்து காமகொடூரன் சங்கர் கைது செய்யப்பட்டுபோக்சோ வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று காமகொடூரன் சங்கருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் மேலும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக கூடுதலாக 2 ஆண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தமாக இரண்டு ஆண்டு கால கடுங்காவல் சிறை தண்டனை.
சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.