ஆரணியில் சமூக நலத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில்
கர்ப்பிணி தாய்மார்க்களுக்கு பெண் சேர்மன்கள் சந்தனம் பூசி சீர்வரிசையை
வழங்கினார்கள். இதில் ஆரணி எம்.பி விஷ்ணுபிரசாத் பங்கேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டலநாகநதி ஆற்று அருகில் உள்ள இந்து
அறநிலை துறை சொந்தமான திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர்
உரிமைத்துறை ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகியோர்
சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட திட்ட அலுவலர்
கந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி விஷ்ணுபிரசாத் மற்றும் மாவட்டச் செயலாளர் M.S தரணிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்..
மேலும் மேற்கு ஆரணி மற்றும் ஆரணி ஓன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 250
கர்ப்பிணி தாய்மார்களுக்க சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அனைத்து
கர்ப்பிணி பெண் தாய்மார்களுக்கு மாலை அணிவித்தனர்..
மேலும் பின்னர் மேற்கு ஆரணி மற்றும் ஆரணி ஓன்றியம் பெண் சேர்மன்கள்
பச்சையம்மாள் சீனிவாசன் கனிமொழிசுந்தர் கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர்
மகாலட்சுமி கோவர்தன் ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சந்தனம் பூசி
சீர்வரிசை வழங்கினார்கள்.
இதில் திரளான கர்ப்பிணி தாய்மார்கள் பங்கேற்றனர்..