பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தொடர் மழையால் அடுத்தடுத்து நிரம்பி வரும் ஏரிகளை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த மாதம் பெஞ்சல் புயல் கனமழையால் அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழத்த தாழ்வு நிலையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை பெய்தது.
ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் அன்மருதை மற்றும் நெசல் கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதை கிராம பொது மக்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும் நிரம்பி வரும் ஏரிகளை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.