திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுரேஷ் (45) கலா தம்பதியினர்.மேலும் இவர்களுக்கு பார்த்திபன் (20) பாண்டியன் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் சுரேஷ் மீன்பிடிக்க அருகே உள்ள ஏரிக்கு சென்றுள்ளார் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை இதனால் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காத காரணத்தினால் ஏரி அருகே சென்று பார்த்த போது சுரேஷின் ஆடைகளை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில்தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணி வீரர்கள் ஏரியில் இறங்கி தேடினார்கள் ஏரி நீர் முழு கொள்ளளவு இருப்பதால் சுமார் 9 மணி நேர போராட்டதிற்கு பிறகு சுரேஷை சடலமாக மீட்டனர்.
இதையடுத்து களம்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.