ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி தொட்டபுரத்தைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி முத்துமணி(43). இவருக்கு நாகமல்லு (25) என்ற மகன் உள்ளார். நாகமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார்(40) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே 27ம் தேதி குமார் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் ஆசனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஜூன் 25ம் தேதி தாளவாடி அருகே உள்ள தொட்டபுரம் அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து ஆய்வுக்கு அனுப்பினர். உறவினர்களை அழைத்து அடையாளம் காணப்பட்டதில் இறந்து கிடந்தது குமார் என தெரிய வந்தது.
இதற்கிடையே, சந்தேகத்தின்பேரில் முத்துமணியை பிடித்து போலீசார் விசாரித்தபோது குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில், தாய் முத்துமணியுடன் குமார் தகாத உறவு வைத்திருந்தாக கூறப்படும் நிலையில் தோட்டத்தில் தாய் முத்துமணியுடன் குமார் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த நாகமல்லு(25) சுத்தியால் குமாரை தலையில் தாக்கி அடித்து கொன்றதாகவும் உயிரிழந்த குமாரின் உடலை உறவினர் மாதேவன்(24) உதவியுடன் தொட்டபுரம் வனப்பகுதியில் வீசியதும் தெரியவந்தது.
கொலை சம்பவம் தொடர்பாக தாய் முத்துமணி, மகன் நாகமல்லு மற்றும் உறவினர் மாதவன் ஆகியோரை ஆசனூர் போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..