திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலை காந்திரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக பகுதியாக உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு திருக்கோவிலூர் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி வந்த கனரக லாரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி டவுன் காந்தி சாலை திரும்ப முயன்ற போது திடீரென நெல் மூட்டைகள் சரிந்து சாலை நடுவே இருந்த மின் கம்பங்கள் மீது சாய்ந்து அடுத்தடுத்து 2 மின் கோபுர விளக்கு கம்பங்கள் சாலையில் திடீரென சாய்ந்தது.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து பதறி அடித்து கொண்டு ஒட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டது.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மின் கம்பங்களை போக்குவரத்து உதவி ஆய்வாளர் முத்துலிங்கம் தலைமையில் போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் இதனால் ஆரணி பஜார் வீதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டன…