திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணி விழுப்புரம் சாலையில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் எஸ்.ஐ சுந்தரேசன் தனிபிரிவு அதிகாரிகள் ஜோதி வினோத் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் அப்போது வந்தவாசி சாலையிலிருந்து ஆரணி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் சோதனை செய்தனர். இதில் போதை வஸ்துக்களான குட்கா 1 மூட்டையை பறிமுதல் செய்து ஆரணி வாலிபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தங்களின் பாணியில் விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(32) என்பதும் ஆரணி பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்யபட்டு வருவது தெரிய வந்தன
உடனடியாக பிரகாஷ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1லட்சம் மதிப்பிலான 8 மூட்டை குட்காவை பறிமுதல் செய்து பிரகாஷ் என்பவர் மீது வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.