அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய போது செங்கம் அருகே விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி..
செங்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரி பாளையம் அருகே கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த லாரியும் திருவண்ணாமலையிலருந்து கர்நாடக நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது
இதில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் 4 பெண்கள் 1 ஆண் என 8 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி துடி துடித்து இறந்தனர்..
முதற்கட்ட விசாரணையில்
மகாளிய அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு மேல்மலையனூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து கர்நாடகாவிற்கு காரில் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் பயணம் செய்த ஒரு பெண் மட்டும் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்..
காரில் இருந்த அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு விபத்தில் இருந்தது யார் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
செங்கம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு நபர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…