சென்னையில் ஆக 3ந் தேதி தொடங்கி 12ந் வரை நடைபெற்றன.சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்- பாகிஸ்தான் அணியும் மோத உள்ள ஆட்டத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகவில் உள்ளன என ஹாக்கி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு ஹாக்கி பிரிவு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு அமைச்சகம் இணைந்து இத்தொடரை நடத்துகிறது.
ரசிகர்களை அதிகளவில் வரவேற்க இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் சர்வதேச ஹாக்கி போட்டி என்பதால் தமிழ்நாடு அரசு போட்டியை பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. போட்டியின் அடையாளமாக பொம்மன் என்ற யானை அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டி பிரபலபடுத்த தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.
செய்தியாளர் கோ.நந்தகுமார்