திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கடந்த 1931 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்பு 1951 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 1987 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டன. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தேர்வு நிலை சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது.
மேலும் ஆரணி நகராட்சியின் முக்கிய அடையாளங்களாக புதிய பழைய பேருந்து நிலையம் கோட்டை மைதானம் மணிகூண்டு புத்திரகாமேட்டீஸ்வரர் கைலாசநாதர் திருக்கோவில் முக்கிய ஸ்தலமாகவும் ஆடி முதல் வெள்ளி வேம்புலியம்மன் கோவில் திருவிழா நெசவு தொழில் பட்டு விவசாயம் அரிசி ஆலைகள் முக்கிய தொழிலாகவும் ஆரணியின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றன.
மேலும் இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளடக்கியதில் 90ஆயிரம் மக்கள் தொகையாக உள்ளன. ஆரணி டவுன் பகுதியை நகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மைபடுத்தும் பணியில் செய்யபட்டு வருகின்றன.
ஆரணி நகராட்சி ஆண்டு வருமானம் தற்போது 14 கோடிக்கு ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகராட்சி நிர்வாகம் மூலமாகதான் அதிக வருவாய் ஈட்டி தருகின்றன.
நகராட்சி தன் செயல்பாடுகளை பொது நிர்வாகம்இ பொறியியல்இ வருவாய்இ பொது சுகாதாரம்இ நகரமைப்புத் திட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆறு துறைகளுக்கு பகிர்ந்தளித்துச் செயல்பட்டு வருகிறது.
இந்த துறைகள் அனைத்தும் நகரமன்ற தலைவர் நகராட்சி ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகத் தலைவர் உட்பட 33 வாhடு கவுன்சிலர்கள் கொண்ட அமைப்பு சட்டம் இயற்று பணியை மேற்கொள்ளபட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதால் ஆரணி நகராட்சியை விரிவாக்கம் பணியில் தற்போது உள்ள இரும்பேடு சேவூர் பையூர் வேலப்பாடி முள்ளிபட்டு வடுகசாத்து உள்ளிட்ட 6 ஊராட்சிகளை ஆரணி நகராட்சியில் இணைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
6 ஊராட்சிகள் நகராட்சியில் இணைத்தால் நகராட்சி விரிவாகத்தில் சுமார் 1லட்சத்து 50ஆயிரம் பொதுமக்கள் இணைவதால் வருவாய் அதிகரித்து சிறப்பு நிலை நகராட்சியாக அந்தஸ்த்து பெற்று தமிழகத்தில் முதன்மை நகராட்சியாக விளங்க வாய்ப்புள்ளதாக நகராட்சி ஆணையர் சரவணன் கூறினார்.