கடந்த மே மாதம் விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளசாராயம் குடித்து 20 பேர் இறந்த சம்பவமும் தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றியுள்ள மலைகளில் மற்றும் கிராமங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு சாராயம் காய்ச்சபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் என மாவட்ட அளவில் 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அதுமட்டுமல்லாமல் கண்ணமங்கலம் மற்றும் சந்தவாசல் ஆகிய பகுதிகளில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளன. இதனையொடுத்து ஆரணி அருகே படவேடு மற்றும் சந்தவாசல் காட்டுபகுதியில் சாராய வியாபாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக புகாரின் பேரில் மாவட்ட எஸ்;.பி கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர் உள்பட 5 தனிப்படை அமைத்து கண்ணமங்கலம் அருகே உள்ள நாமக்கார மலை உள்ளிட்ட மலை பகுதிகளில் மற்றும் புதர்களில் இடையே சாராயம் காய்ச்சபடுகின்றதா என போலீசார் சல்லடை போட்டு தீவிரமாக ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மலைப்பகுதிகளில் உள்ள புதர்களில் நிலசரிவுகளில் கள்ள சாராயம் காய்ச்சி வருகின்றார்களா எனவும் டிரோன் கேமரா மூலம் காலை முதலே நடைபெற்று வந்த இந்த சாராய வேட்டையில் இதுவரை சுமார் 200 லிட்டர் சாராயத்தை கண்டெடுத்து மலை பகுதிகளிலேயே அழித்தனர். போலீசாரின் அதிரடி வேட்டை தொடருமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு?