ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் அபராதம் ரயில்வே துறை அறிவிப்பு..

ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் அபராதம் ரயில்வே துறை அறிவிப்பு..

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி. சுகுணா சிங் நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 245 ரயில் நிலையங்களில், 1,300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் சுழற்சி அடிப்படையில் போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்..ரயில்களில் தடையை மீறி பட்டாசு எடுத்துச்செல்லும் பயணிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில், மின்சார ரயில்களில் பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த7-ம் தேதி ஒரே நாளில் மட்டும் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பண்டிகை நாட்களில் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குகொள்ளையர்கள் வருவார்கள்.இதைக் கண்காணிக்க சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் தனி குழு அமைக்கப்பட்டு, கண்காணித்து வருகிறோம்..மேலும், முன்பதிவு செய்த பெட்டிகளில், முன்பதிவு செய்யாதவர்கள் ஏறுவதை தடுக்க அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பெட்டிகளில், முன்பதிவு செய்யாதவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டால் பயணிகள் 1512 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, புகார் தெரிவிக்கலாம் என்றார்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..