திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தினேஷ்(35) இவர் அதே கிராமத்தில் கடந்த 10ஆண்டுக்கு மேலாக கோழிபண்ணை நடத்தி வருகின்றார்.
மேலும் தற்போது கோடை வெய்யில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரையில் வெயிலுக்கு 10பேர் இறந்துவிட்டதாகவும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அனல்காற்று வீச கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகளவில் உள்ளன. வேலூரிலிருந்து புதுப்பாளையத்திற்கு 15கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளதால் புதுப்பாளையம் கிராமத்தில் சில தினங்களாக வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ளன.
இதனால் பதுப்பாளையம் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் வெய்யில் தாக்கம் தாங்க முடியாமல் 70ஆயிரம் ரூபாய் மதிப்பீலான சுமார் 350 கோழிகள் திடிரென இறந்து விட்டன.
அதிர்ச்சியடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் திணேஷ் பண்ணை அருகில் ஜேசிபி இயந்திரம் மூலம் 10அடி பள்ளம் தோண்டி கோழிகளை அடக்கம் செய்தார்.
தொடர்ந்து வெய்யில் தாக்கம் உள்ளதால் மேலும் கோழிகள் இறக்க நேரிடுவதாகவும் இதனால் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.