திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னுத்தூர் கிராமத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
குன்னத்தூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் வீடுகள் தோறும் தெருநாய்களை வளர்த்து வருகின்றனர்.
மேலும் குன்னத்தூர் ஏரி அருகில் வாத்துகளை வளர்த்து வருவதாகவும் வாத்துகளை நாய்கள் கடித்து குதறி வருவதாக கூறப்படுகின்றன.
இந்நிலையில் குன்னத்தூர் கிராமத்தில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட நாய்களுக்கு மாட்டு இறைச்சியில் மர்மநபர்கள் விஷம் கலந்து வைத்துள்ளதால் நாய்கள் துடிதுடித்து ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதியில் இறந்ததுள்ளன.
இதனால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளன. நாய்களுக்கு இறைச்சியில் விஷம் கலந்து நாய்களை கொன்ற மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.