திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் விவசாய நிலத்தில் நெல் பயிர் நடவு செய்வதற்காக மாடுகளை வைத்து ஏர் உழவு பணியில் ஈடுபட்டபோது எதிர்பார்ப்பு விதமாக நிலத்தில் இருந்த மின் இரும்பு கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு உழவு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது மாட்டின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் மாட்டின் உரிமையாளரின் குடும்பத்தினர் பாதிரி கிராமத்தில் இருந்து தகவல் அறிந்து விவசாய நிலத்துக்கு ஓடி வந்து உழவு இறந்து போன மாட்டை அதனை கட்டிக்கொண்டு அழும் சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை கண்கலங்கச் செய்தது.
வந்தவாசி நெமந்தகார தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் இவருக்கு பாதிரி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. இதனைத் தொடர்ந்து இவருடைய விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக பாதிரி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கூலிக்கு 2 மாடுகளை வைத்து ஏர் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பத்திலிருந்து திடீரென மின்சாரம் பாய்ந்தது இதில் இரண்டு மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்த போது இரண்டு மாடுகள் துடித்து துடித்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த நிலையில் அருகில் இருந்த சின்னப் பையன் அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டார்.இதனால் அதிர்ஷ்டவசமாக சின்ன பையன் உயிர் தப்பினார்.சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு உழவு மாடுகள் உயிரிழந்து உள்ளதால் சின்னப் பையனின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்