ஆரணி அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதி.

ஆரணி அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதி.

திமுக மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் நேரில் ஆறுதல் கூறி ரொட்டி பழம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கெங்காபுரம் ஊராட்சிக்குபட்ட சமத்துவபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் சுமார் 25 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மேலும் இந்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் இன்று வழக்கம் போல் காலையில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில் சேமியா உப்புமா வழங்கபட்டுள்ளன. இதனை சுமார் 13 மாணவர்கள் சேமியா உப்புமா உணவை உட்கொண்டனர்.

அப்போது உணவில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உணவை உண்ட தீபிகா சுமத்ரா கந்தன் சுனில்குமார் சபரி தூயவன் சஞ்சனா காவ்யா உள்ளிட்ட 13 குழந்தைகளை பெரியகொழப்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து மேல்சிகிச்சகை;காக ஆரணி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையறிந்த திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும் செய்யார் சர்க்கரை ஆலை இயக்குநருமான தரணிவேந்தன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சென்று நலம் விசாரித்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் இது சம்மந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் : இன்று காலையில் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் உட்கொண்ட உணவில் பல்லி இருந்ததாக கூறப்பட்டன. ஆனால் தற்போது குழந்தைகள் நலமாக இருக்கின்றனர் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் குழந்தைகள் இருந்து வருகின்றனர். உணவை பராமரித்த பாத்திரத்தில் பல்லி இருக்க வாய்ப்புள்ளன என தெரிகின்றன இருப்பினும் குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தி தொடர் கண்காணிப்பு செய்யபடும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..