ஆரணி அருகே அடுத்தடுத்து 4வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 10 சவரன்
தங்க நகை மற்றும் 36ஆயிரம் ரொக்கபணம் கொள்ளை.
கைரேகை நிபுணர் எஸ்.ஐ தேவிபிரியா கைரேகையை சேகரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த
முன்னாள் ராணுவ வீரர் தண்டபாணி இவருக்கு கீதாமஞ்சுரி என்ற மனைவியும்
2மகன்கள் உள்ளனர்.
மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தண்டபாணி மதுரையில் ஓட்டல் நடத்தி
வருவதால் கீதாமஞ்சுரி தனது குழந்தைகள் மற்றும் தாயுடன் வசித்து
வருகின்றார்.
வழக்கம் போல் நேற்று இரவு ஓரே அறையில் தூங்க சென்றுள்ளனர்.
இதனை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து
உள்ளே வந்து அலமாறியில் வைக்கபட்ட சுமார் 24ஆயிரம் ரொக்கபணத்தை
கொள்ளையடித்து சென்றனர்.
இதனையொடுத்து அதே கிராமத்தை சேர்ந்த சரிதா என்பவரின் கணவர் மூர்த்தி சில
ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் தனது 2மகளுடன் வசித்து வருகின்றார்.
சேத்பட்டில் உள்ள தனது
உறவினர் வீட்டிற்கு செல்வதால் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில்
இருந்த 10சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கபணத்தை திருடி
சென்றுள்ளனர்.
அதே போல பரிமளா என்ற பெண்மணி வீட்டில் திருட முயன்று எதுவும்
கிடைக்கவில்லை என்பதால் மர்மநபர்கள் திரும்பி சென்றுள்ளனர்.
இன்று காலையில் பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் இது
சம்மந்தமாக கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் புகாரின் பேரில் கண்ணமங்கலம் ஆய்வாளர் மகாலட்சமி தலைமையில்
போலீசார் சம்பவடத்திற்கு கைரேகை நிபுணர் எஸ்.ஐ தேவிபிரியா தடயங்களை
சேகரித்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து 4வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில்
ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆரணி அருகே ஓரே கிராமத்தில் அடுத்தடுத்து 4 வீடுகளில் தொடர் கொள்ளை
சம்பவம் அந்த கிராமத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.