ஆந்திராவில் கண்டகப் பள்ளி அருகே இரண்டு ரயில்கள் மோதல் 10 பேர் பலி 50க்கும் மேற்பட்ட நபர்கள் காயம்..

ஆந்திராவில் கண்டகப் பள்ளி அருகே இரண்டு ரயில்கள் மோதல் 10 பேர் பலி 50க்கும் மேற்பட்ட நபர்கள் காயம்..

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல்.. 10 பேர் பலி.. பலர் காயம்..

இந்த துயர நிகழ்வில், 10 பேர் மரணமடைந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் ராயகட்டா பயணிகள் விபத்துக்களானது. இந்த துயர நிகழ்வில், 10 பேர் மரணமடைந்துள்ளார். 15 இருக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம். மூன்று பேர் மரணம்.

குண்டூரில் இருந்து ராயக்கட்ட சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே நேரத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ராயக்கட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது.

விபத்து பற்றி தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் விஜயநகரத்திலிருந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். இருட்டு மற்றும் மின்சார வயர் அறுந்து விழுந்தது ஆகிய காரணங்களால் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..