திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் பத்து ரூபாய் நாணயங்களை ஏற்க மறுப்பது ஏன்…??

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் பத்து ரூபாய் நாணயங்களை ஏற்க மறுப்பது ஏன்…??

சென்னை காஞ்சிபுரம் மதுரை திருநெல்வேலி திருச்சி கோவை என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை எவ்வித மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொள்கின்றனர்…

ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டும் நிலைமை அடிப்படையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என யாரோ விஷமிகள் சில ஆண்டுகளுக்கு முன் கிளப்பிவிட்ட வதந்தி இன்று வரை தொடர்ந்து வருகின்றது…

அப்படியெல்லாம் இல்லை இந்திய அரசால் ஏற்பளிப்பு செய்யப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட இந்த 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று வங்கிகளின் வழியே அறிவிப்பு வெளியிடப்படும் இந்த நிலைமை தொடர்வேசெய்கிறது..

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த பத்து ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன…

குறைந்த அளவே பயன்பாட்டில் இருந்தாலும் கையாள மிக எளிதான நாணயம் இது. பத்து ரூபாய் நோட்டுக்களை போல் கிழியாது எக்கச்சக்க அழுக்குகளை தன்னுடன் எடுத்து வராது என்பதால் இந்த நாணயத்தை பல பேருக்கு பிடிக்கும்..

ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தினருக்கும் வேலூர் மாவட்டத்தினருக்கு மட்டும் இது இன்று வரைக்கும் எட்டிக்காயாகவே இருக்கிறது…

சில சமூக ஆர்வலர்கள் இதை சரி செய்யும் வகையில் அங்கங்கே வேண்டி விரும்பி பத்து ரூபாய் நாணயங்களை தங்கள் கடைகளில் வாங்கிக் கொண்டாலும் மக்கள் இந்த நாணயத்தை கண்டு சற்று தள்ளியே நிற்கின்றனர். அதனால் இந்த பகுதியில் மட்டும் இந்த நாணயத்தின் புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது…

சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கூட இந்த பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மாட்டோம் என்று நடத்துனர்கள் கூறும் கதை எல்லாம் உண்டு சில தனியார் வங்கிகளும் இதை வாங்க மறுத்து வருகின்றனர் இன்றளவும்…

இந்த நிலையில் இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் வர்த்தக பிரமுகர்கள் நுகர்வோர் அமைப்பினர் மற்றும் ஆட்சியரைக் கொண்ட திருவண்ணாமலை மாவட்ட அளவிலான மேலாண்மை குழு கூடி விவாதித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன..

இதன்படி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும் பேருந்துகளில் இது தொடர்பான அறிவிப்புகளை ஒட்ட வேண்டும்..

அதேபோல வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களும் இருந்து எவ்வித மறுப்பு இன்றி 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் வங்கிகளிலும் இது குறித்து அறிவிப்பை அதிகப்படியாக ஒட்ட வேண்டும் அனைத்து வங்கிகளும் இணைந்து பத்து ரூபாய் நாணயங்கள் குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது..

நாணயங்களை பராமரிப்பது மிக கடினம் ரூபாய் நோட்டுக்களாக இருந்தால் கவுண்டிங் மிஷினில் வைத்து சுலபமாக கணக்கிட முடியும்.

இந்த நாணயங்களை வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பதால் நாங்களும் வாங்குவதில்லை என்று ஆரணி நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்…

இதுகுறித்து வங்கி அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது இது பழைய கதை இப்போதெல்லாம் பத்து ரூபாய் கட்டுகளை எந்த வாடிக்கையாளர்களும் கேட்பதலை 100 200 என்றே கேட்கின்றனர்.

புதிதாக வந்திருக்கும் இருபது ரூபாய் நாணயங்கள் கூட சில்லறை தேவைக்காக ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பத்து ரூபாய் நாணயங்களையும் வாடிக்கையாளர்கள் கேட்டு பெறுவதில்லை.

வங்கிகளை பொறுத்த வரையில் சில வங்கி அதிகாரிகள் நாணயங்களை வாங்க மறுத்திருக்கலாம் அப்படி மறுத்தால் சம்பந்தப்பட்ட வங்கியின் மேலதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்கின்றனர்..

திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலைமை இப்படி இருக்க வேலூர் மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் பழக்கம் ஓரளவுக்கு சீராகி வருகின்றது குறிப்பாக ராணிப்பேட்டை திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதியில் வர்த்தகர்கள் கூட்டம் போட்டு இனி பத்து ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து செயல்பட்டு வருகின்றனர்..

இது போல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் முன்பு போல் இல்லாமல் கடைகளில் இந்த நாணயங்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்..

திருவண்ணாமலை மாவட்ட வர்த்தகர்கள் மாவட்டத்தை போல் இதில் உறுதியான முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினால் பத்து ரூபாய் நாணயங்கள் இந்த மாவட்டத்திலும் செல்லுபடியாகும்.

நாணயங்கள் பற்றி வீண் புரளிகளை பரப்பும் நபர்கள் மீது இந்திய சட்டம் விதிமுறை 489 ஏ மற்றும் 489 இ பிரிவினுக்கு தண்டனை அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது….

ஆரணி செய்தியாளர்

ம.மோகன்ராஜ்

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..

One Comment

  1. Star says:

    I’m amazed, I must say. Seldom do I encouynter a blog that’s both educative and amusing, and without
    a doubt, you have hit the nail on the head. The prooblem iis soething that too
    few folks are speaking intelligently about. I’m very happy I stumbled
    across this in my hunt for something concerning this.

    Here is my web blog; Star

Leave a Reply